தி.பூண்டி அரசு ஆண்கள் பள்ளியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 31: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.தலைமையாசிரியர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பாலமுருகன், ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக், ஆசிரியர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கிள்ளி வளவன் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் வாகனம் ஒட்டுவோர் கடைபிடிக்க வேண்டியவை குறித்தும் பேசினார்.போக்குவரத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டு சரியாக பதிலளித்த மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சக்கரபாணி நன்றி கூறினார்.

Related Stories: