கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தண்ணீரின்றி காலியாக கிடக்கும் சின்டெக்ஸ் தொட்டி கந்தர்வகோட்டையில் நீர் மேலாண்மை, மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி

கந்தர்வகோட்டை, மார்ச் 31: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் போஷன் பக்வாடா 2022 என்ற இருவார நிகழ்ச்சியில் நேற்று மழை நீர் மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு, இதில் பெண்களின் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்று மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். இந்த பேரணியை வட்டாட்சியர் (பொறுப்பு) தயாவதிகிறிஸ்டினா கொடியசைத்து தொடங்கி வைத்தார். குழந்தைகள் வளர்ச்சி அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

Related Stories: