×

சாலை அமைக்க பூமி பூஜை

போச்சம்பள்ளி, மார்ச் 31: போச்சம்பள்ளி அருகே எருமாம்பட்டி ஊராட்சியில், கூரம்பட்டி தேனோடை நகர் சாலை முதல் அலரிப்பள்ளம் கோயில் வரையும், கூரம்பட்டி ஏரிக்கரை முதல் மொட்டையன் கொட்டாய் வரையும், தார்சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் விமலாபெரியசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் மகேந்திரன், துணை தலைவர் அன்பரசு, கவுன்சிலர்கள் சுரேஷ், குமரவேல், சரவணன், எல்லப்பன், முனியப்பன், சின்னதம்பி, முனியப்பன், பூசாரிமுனியப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்து கொண்டு, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். மாவட்ட துணை செயலாளர் தட்ரஅள்ளிநாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாதவிமுருகேசன், தட்ரஅள்ளி ரமேஷ், சுப்பிரமணி, மகேஷ், வெண்ணிலாமுருகேசன், செந்தாமரைதமிழரசு, பிடிஓக்கள் அசோகன், அன்சர்பாஷா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து 30 ஆயிரம் லிட்டர் தரைமட்ட நீர் தேக்க தொட்டியை, பர்கூர் எம்எல்ஏ மதியழகன் திறந்து வைத்தார்.


Tags : Earth ,
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...