×

என்எல்சியில் வேலை வழங்க வலியுறுத்தி உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகள் காத்திருப்பு போராட்டம்

நெய்வேலி, மார்ச் 31: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில், பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகள் கூட்டமைப்பினர்  என்எல்சி தலைமை அலுவலகம் முன் குடும்பத்துடன் பிச்சை எடுத்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கடந்த 1999 முதல் 2004ம் ஆண்டு வரை ஏராளமான என்எல்சி ஊழியர்கள் உயிரிழந்தனர். இவர்களது வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க என்எல்சி நிர்வாகம் சார்பில் சுமார் 200 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இவர்களில் தற்போது 100க்கும் குறைவானவர்களே வேலைக்கு காத்திருக்கின்றனர். இவர்கள் தங்களுக்கு உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று என்எல்சி தலைமை அலுவலகம் முன் சுமார் 25க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் பிச்சை எடுத்து காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த என்எல்சி செயல் இயக்குநர் சதீஷ்பாபு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது தங்கள் கோரிக்கைகளை குறித்து என்எல்சி தலைவரிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : NLC ,
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...