×

சேர்ந்தமரத்தில் திமுக பொதுக்கூட்டம்

சுரண்டை, மார்ச் 30: மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் சேர்ந்தமரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியச்செயலாளர் டி.டி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து ராஜா எம்எல்ஏ, மாநில பேச்சாளர் சரத் பாலா சிறப்புரையாற்றினர். இதில் ஒன்றியச் செயலாளர்கள் பெரியதுரை, வெற்றி விஜயன், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கடையாலுருட்டி சேர்மன், ஆறுமுகச்சாமி, மாரியப்பன், கிளைச் செயலாளர் முருகன், நிர்வாகிகள் சிற்றரசு, கிருஷ்ணசாமி பாண்டியன், கோமதி ராஜ் திருநாவுக்கரசு, விஜயன், சார்லஸ், விவேகானந்தன், பெரியசாமி, அருள் சீனி பண்டாரக்கண்ணு, முத்துமாரி, வேல்மயில், சுந்தரி, கிருஷ்ணசாமி, பாண்டியாபுரம் பிரேம்குமார், கொடி கோபாலகிருஷ்ணன், ரத்தினசாமி, மெடிக்கல் கார்த்தி, ஸ்டீபன் சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : DMK ,Chernthamaram ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்