சாயர்புரம் தூய மேரி பள்ளி புதிய தாளாளர் பதவியேற்பு

ஏரல்,  மார்ச் 30: சாயர்

புரம் தூய மேரி மகளிர் மேல்நிலைப் பள்ளி புதிய தாளாளராக  காவல்காடு சொர்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய  தாளாளர் பதவியேற்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது.  கவுன்சில் சேர்மன் குருவானவர் வெஸிலி ஆரம்ப ஜெபம் செய்து  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளி  தாளாளர் ஜெபர்சன் சாமுவேல்ராஜ் தலைமை வகித்தார். மகளிர் பள்ளி தலைமை  ஆசிரியர் கலைச்செல்வி வரவேற்றார். இதில் மகளிர் பள்ளி புதிய தாளாளராக  காவல்காடு சொர்ண

குமார் பதவியேற்று கொண்டார். நிகழ்ச்சியில் டயோசீசன்  செயற்குழு உறுப்பினர்கள்  தேவசகாயம், பெவின், திருமண்டல பெருமன்ற  உறுப்பினர் வினோத்குமார், மீனாட்சிபட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி  நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார், இடையர்காடு சேகர செயலர் கிங்சன்,  அணியாபரநல்லூர் பொன்ராஜ், திமுக மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார் உட்பட பலர்  கலந்து கொண்டனர். தாளாளர் காவல்காடு சொர்ணகுமார் நன்றி  கூறினார்.

Related Stories: