×

திருத்துறைப்பூண்டியில் கஞ்சா வியாபாரி கைது

திருத்துறைப்பூண்டி, மார்ச் 30: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் நாகை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

விசாரணையில் திருத்துறைப்பூண்டி மீனாட்சிவாய்க்கால் கீழத்தெரு பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ்வரன் (26) என்பது தெரியவந்தது. அவரை சோதனை செய்தபோது விற்பனைக்காக 1 கிலோ 400 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது . தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த திருத்துறைப்பூண்டி போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags : Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் டூவீலரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது