×

கறம்பக்குடி வேளாண் வட்டாரத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

கறம்பக்குடி, மார்ச் 30: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வேளாண் வட்டாரத்தில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டிற்கான வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. கறம்பக்குடி அட்மா கமிட்டி ஆலோசனை குழு தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார் வட்டார தொழில் நுட்ப குழு அமைப்பாளர் லூர்து ராயப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அட்மா கமிட்டி ஆலோசனை குழு தலைவர் முத்துகிருஷ்ணன் பேசுகையில், அட்மா குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் மேலாண்மை துரையின் திட்டங்களை செயல்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். லூர்து ராயப்பன் பேசுகையில், வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். வேளாண்மை பொறியியல் துறையை சார்ந்த உதவி செயற்பொறியாளர் சேகர் கலந்து கொண்டு தாங்கள் துரையின் மூலம் செயல்படுத்த படும் திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார்.மேலும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறை மற்றும் தோட்டக்கலை துறையை சேர்ந்த அலுவலர் கள் கலந்து கொண்டு தாங்கள் துரையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி கூறினர். கறம்பக்குடி உதவி மேலாண்மை அலுவலர் பால்சாமி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜகுபர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.கூட்ட ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் துரைராஜ். சுப்பிரமணி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Karambakudy Agricultural District ,
× RELATED கறம்பக்குடி வேளாண் வட்டாரத்தில்...