×

மயிலாடுதுறையில் வாட்டி வதைக்கும் வெயில் கீழ்வேளூர் அடுத்த காணூரில் ஓடம்போக்கி ஆற்றில் சோதனை சாவடி

கீழ்வேளூர், மார்ச் 30:கீழ்வேளூர் அடுத்த காணூரில் ஓடம்போக்கி ஆற்றில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் பாசனதாரர்கள் வேதனை அடைந்துள்ளனர்.நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த காணூர் என்ற இடம் நாகை, திருவாரூர் மாவட்ட எல்லையாகும். காணூரில் ஓடம்போக்கி ஆற்றில் சட்டரஸ் உள்ளது. இந்த சட்டரசில் இருந்து ஆத்தூர், கூத்தூர், இலுப்பூர், நிலப்பாடி வாய்க்கால் என 8 வாய்க்கல்கள் பிரிகிறது. ஓடம்போக்கி ஆற்றில் காணூரில் இருந்து பிரியும் நீலப்பாடி வாய்க்கால் 24 ஏக்கர் பாசனமும், 5 குளங்களுக்கும் பாசனம் பெறும் வாய்க்காலாகும். காணூரில் இருந்து நிலப்பாடி வரை 2 கி.மீ. சென்று மீண்டும் ஓடம்போக்கி ஆற்றில் வடியும் வடிகாலாகவும் உள்ளது. இந்நிலையில் நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை 2 வழி சாலையாக விரிவாக்கம் பணி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அப்போது நீலப்பாடி வாய்க்கால் தலைப்பில் இருந்து 100 மீட்டரில் இருந்து 300 மீட்டர் வரை சாலை விரிவாக்கத்தின்போது வாய்க்கல் மூடப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகள் விவசாயிகள் எதிர்ப்பு தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் நாகை-திருவாரூர் தேசிய நெடுஞசாலையில் இருந்து காணூர் கிராமத்திற்கு புதிதாக ஆற்றுப்பாலம் கடந்த இரண்டு ஆண்டு அமைக்கப்பட்டது. பாலம் அமைக்கும்போது நீலப்பாடி வாய்க்கால் தலைப்பு முழுவதும் மண் கொட்டி தூர்க்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா காலத்தில் நாகை மாவட்ட எல்லையில் காவல் துறை சார்பில் புதிதாக சோதனைச் சாவடி அமைக்கப்பட்ட போது மண் கொட்டி தூர்க்கப்பட்ட இடத்தில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீலப்பாடி வாய்க்கால் இருந்தற்கான அடையாளம் தெரியாமல் சட்ரஸ் மதகு மட்டுமே உள்ளது. வாய்க்களின் எஞ்சிய பகுதி நன்றாக இருந்தும், சாலை விரிவாக்கத்தின் போது வாய்க்கால் மூடப்பட்டதை சரி செய்து, 24 ஏக்கர் மற்றும் 5 குளத்தின் பாசனம் மட்டும் அல்லாமல் நீலப்பாடி கிராம குடியிருப்பு பகுதியின் வடிகாலாகவும் உள்ள நீலப்பாடி வாய்க்கால் தலைப்பு பகுதியை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விவசாயி நீலப்பாடி சரத்பாபு கூறுகையில் நேரடி நெல் விதைப்பால் மழை கொண்டு சாகுபடி செய்தோம். கடந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டும் வாய்க்கால் தலைப்பு அடைக்கப்ட்டதால் குறுவை சாகுபடி செய்யமுடியாமல் போனது சாலை விரிவாக்கம் அடுத்து காணூர் கிராமத்திற்கு ஓடம்போக்கி ஆற்றில் கட்டிய பால பணிகளின் போது வாய்க்கால் தூர்ந்து போகியுள்ளதை பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Odambokki River ,Kannur ,Veil Kizhvelur ,Mayiladuthurai ,
× RELATED மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின்...