×

புலியூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி துவக்கம் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்

கரூர், மார்ச். 30: கரூர் மாவட்டம் புலியூர் ராணி மெய்யம்மை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக அரசுப்பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை மாவட்ட கலெக்டா பிரபு சங்கர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.கண்காட்சி குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த படைப்பாற்றல் திறன், தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றை கண்டறியவும், வளப்படுத்தவும் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியானது மார்ச் 29ம்தேதி முதல் 30ம்தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.38 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 66 படைப்புகளும், 51 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 146 படைப்புகளும் என மொத்தம் 89 அரசு பள்ளிகளில் இருந்து 212 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்காட்சியின் இரண்டாவது நாளன்று அருகாமையில் உள்ள பள்ளிகளில் பயிலும் 1100 மாணவ, மாணவிகள் இந்த கண்காட்சியை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த நிகழ்வில் 7 வகையான அறிவியல் தலைப்புகளின் கீழ், உணவு, பொருட்கள், நம்மைச் சூழ்ந்து இருக்கும் உயிரின உலகம், மனிதர்கள், சிந்தைனைகள் மற்றும் இயங்கு பொருட்கள், கருவிகள் இயங்கும் விதம், இயற்கை கோட்பாடுகள், இயற்கை வளங்கள் மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இதில், ஒவ்வொரு தலைப்பிலும் முதல் மூன்று சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு ரூ. 3ஆயிரம் மதிப்பிலும் (அமெரிக்கன் டூரிஸ்டர் பேக், குளோப் மற்றுமு சயின்டிபிக் கால்குலேட்டர்), இரண்டாம் பரிசு ரூ. 2ஆயிரம் மதிப்பிலும் (குளோப் மற்றும் சயின்டிபிக் கால்குலேட்டர்) மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 1000ம் மதிப்பிலும் (சயின்டிபிக் கால்குலேட்டர்) வழங்கப்படவுள்ளது. அனைத்து வெற்றியாளர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழகள் மற்றும் கேடயம் வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என்றார்.இந்த நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட கல்வி அலுவலர்க்ள விஜேந்திரன், பாலசுப்ரமணியன், கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவு, பள்ளி தலைமையாசிரியர் ஜோதிமுருகன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Science Exhibition Opening ,Puliyur School ,
× RELATED நியூ பிரின்ஸ் பள்ளி அறிவியல்...