கரூர் மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

கரூர், மார்ச்30: கரூர் காமராஜபுரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன், இவரின் 7வயது மகன் அதீதன். இந்நிலையில், கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் ராஜேஸ்கண்ணா தனது 7வயது மகனுடன் வந்து அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

காமராஜபுரம் மேற்கு பகுதியில் வசித்து வருகிறேன். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தெருநாய்களை கட்டுப்படுத்துவேன் என்ற வாக்குறுதியோடு மக்களை சந்தித்தது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், கடந்த மார்ச் 23ம்தேதி காலை எனது மகன் அதீதனை வீட்டு நாயும், தெரு நாயும் சேர்ந்து கடித்து விட்டது. இதே போல, இந்த பகுதியில் உள்ள சில குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், நாய்கள் குறுக்கே செல்வதால் அடிக்கடி வாகன விபத்துக்களும் நடைபெறுகிறது. எனவே, சுற்றித்திரியும் நாய் தொல்லைக்கு முடிவு கட்ட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.மேலும், இவரின் மகன் அதிதன், தான் கைப்பட எழுதிய மனுவில், மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில், நான் அதீதன், நாய்களை கட்டிப் போடுங்க, ரொம்பவே கடிக்குது, பயமா இருக்கு எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: