×

சாயர்புரத்தில் மாநில பளுதூக்கும் போட்டிகள் துவங்கியது

ஏரல், மார்ச் 26: சாயர்புரத்தில் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டிகள் துவங்கியது. நாளை மாலையில் பரிசளிப்பு விழா நடக்கிறது. தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்கம், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் பளு தூக்கும் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 2021-22ம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் பளு தூக்கும் போட்டிகள், சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு மண்டபத்தில் 3 நாட்கள் நடக்கிறது. இதன் துவக்க விழா நிகழ்ச்சி, நேற்று மாலை நடந்தது.

தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்க தலைவரும், சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரி தாளாளருமான ராஜேஷ் ரவிசந்தர் தலைமை வகித்தார். மாவட்ட அமெச்சூர் பளு தூக்கும் சங்க தலைவர் அசோக் வரவேற்றார். தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன் ஆரம்ப ஜெபம் செய்தார். போட்டியை திருச்செந்தூர் ஆர்டிஓ புகாரி துவக்கி வைத்து பேசினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி அறவாழி, தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்க செயலாளர் தமிழ்செல்வன், குருத்துவ செயலாளர் இமானுவேல் வான்ஸ்டக், சாயர்புரம் சேகர தலைவர் டேனியல் ஞானபிரகாசம், சுப்பிரமணியபுரம் சேகர தலைவர் டேவிட்ராஜ், சாயர்புரம் போப் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெபர்சன், தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்க துணை தலைவர் நவராஜ் புல்கானின் டேனியல்,

பொருளாளர் ருத்ரமூர்த்தி, தமிழ்நாடு கூடைப்பந்து சங்க துணை தலைவர் பாலமுருகன், பொருளாளர் தர், சாயர்புரம் திமுக நகர செயலாளர் அறவாழி, பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், வெல்டன் மன்ற செயலாளர் அன்ட்ரூஸ், ஏரல் மண்டல துணை தாசில்தார் பொன்னுலட்சுமி, பெருங்குளம் ஆர்.ஐ விஜய் ஆனந்த், சாயர்புரம் விஏஓ முத்துலெட்சுமி, தொழிலதிபர் விஜயராஜா  உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, 27ம் தேதி நடக்கிறது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பரிசு வழங்குகிறார். ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் ராஜேஷ் ரவிசந்தர், அசோக், நெல்சன் பொன்ராஜ், தர், நவராஜ் புல்கானின் டேனியல், பால்ராம், குணசேகர், தமிழரசன், செல்வின், பிரதீப், செண்பகமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ், ஈஸ்டர், அலெக்ஸ் ஞானமுத்து, அற்புதராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags : State Weightlifting Championships ,Sayarpuram ,
× RELATED சிவத்தையாபுரத்தில் திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்