×

சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டுக்குள் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம்

பண்ருட்டி, மார்ச் 26:  பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் பண்ருட்டி, நெய்வேலி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி இயங்கி வருகிறது. இரு தொகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அரசு நலத்திட்டங்கள், பட்டா, மற்றும் வருவாய்துறை சான்றுகள் ஆகியவை பெறுவதற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தின் தரை தளத்தில் வட்டாட்சியர் அறை,  நில அளவைத்துறை, ஆவண பாதுகாப்பகம், இ.சேவை மையம், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அலுவலக பிரிவுகள் அமைந்துள்ளன. முதல் தளத்தில் குடிமைபொருள் வழங்கல்துறை, சமூகநலத்துறை அலுவலகங்களும், ஆதார் பிரிவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரிவுகள் இயங்கி வருகின்றன.

வட்டாட்சியர் அலுவலகத்தில் தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்வதால் பாதுகாப்பு நலன் கருதி முதன் முதலாக தாசில்தார் சிவகார்த்திகேயன் முயற்சியால் அனைத்து பிரிவுகளுக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அலுவலக பதிவேடுகள் திருடுபோகாமல் இருப்பதற்கும், எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் இருப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. இதேபோல் அலுவலகத்தின் வெளிபுறத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பொருட்கள் ஆகியவற்றை கண்காணிக்கவும் இருந்து வருகிறது. வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tags : Panruti Governor's Office ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ