×

மஞ்சூரில் நாளை இருதய மருத்துவ முகாம்

மஞ்சூர், மார்ச் 26: நீலகிரி மாவட்டம் குந்தா ரோட்டரி சங்கம் மற்றும் ஊட்டி பி.எஸ்.மருத்துவமனை சார்பில் இலவச இருதய நோய் மருத்துவ முகாம் மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை (27ம்தேதி) நடக்கிறது. இந்த முகாமில் ஈ.சி.ஜி. சர்க்கரை ரத்த பரிசோதனை மற்றும் இருதய சம்மந்தமான நோய்களுக்கு சிகிச்சை, பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. எனவே மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த இலவச முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என குந்தா ரோட்டரி சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

Tags : Manzoor ,
× RELATED தேர்தலில் வாக்களித்தது புதிய...