வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதியில் விதிமீறி கட்டப்பட்ட 10 வீடுகள் இடிப்பு

குன்னூர், மார்ச் 26: குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதியில் விதிமீறி கட்டப்பட்ட 10 வீடுகள் இடிக்கப்பட்டன. நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த வெலிங்டன் கண்டோன்மெண்ட்டில் 7 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள், தங்களது குடியிருப்புகளில் சிறிய அளவிலான கழிப்பறை கட்டவேண்டுமென்றால் கூட, கண்டோன்மெண்ட் நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால், விதிமீறியும், முறையான அனுமதி பெறாமலும் கட்டிடங்களை கட்டியுள்ளனர்.

இந்நிலையில், விதிமீறிய கட்டிடங்களை இடிக்க கண்டோன்மெண்ட் நிர்வாகம் உத்தரவிட்டது. ஏற்கனவே, 3 கட்டமாக 40க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் நேற்று 10 வீடுகளை இடிக்கப்பட்டன. வெலிங்டன், போகி தெரு, கூர்கா கேம்ப், பாய்ஸ் கம்பெனி உட்பட பல்வேறு போலீஸ் பாதுகாப்புடன் கண்டோன்மெண்ட் ஊழியர்கள் இடித்தனர். மேலும், கண்டோன்மென்ட் சார்பில் வீட்டின்  உரிமையாளர்களுக்கு போதிய அவகாசம் கொடுக்காமல் இடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Related Stories: