×

திருவள்ளூர், சோழவரம், ஊத்துக்கோட்டையில் ரூ3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு: வருவாய்த் துறையினர் நடவடிக்கை

புழல்: சோழவரம் ஒன்றியம் பண்டிகாவனூர் கிராமத்தில், ஆறு, ஏரி, குளம் ஆகிய நீர்நிலைகளில் சுமார் 50 ஏக்கர் நிலத்தை  தனியார் சிலர் ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக விவசாயம் செய்தனர். இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்தது. இதுபடறடிற கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், பொன்னேரி ஆர்டிஓ பரமேஸ்வரி (பொறுப்பு) ஆகியோருக்கு தொடர்ந்து புகார்கள் ெசன்றன. இந்நிலையில், பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த், சம்பவ இடத்துக்கு சென்று நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது சுமார் ₹3 கோடி மதிப்பிலான 50 ஏக்கர் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்வது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள், அரசு நிலத்தை அதிரடியாக மீட்டு, அங்கு யாரும் ஆக்கிமிப்பு செய்யக்கூடாது. தவறும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைத்தனர். திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், மப்பேடு கிராமத்தில், ஓடை வகைப்பாடு நிலத்தை ஆக்கிரமித்து, விவசாயம் செய்யப்பட்டது. இதையறிந்த திருவள்ளூர் ஆர்டிஓ எம்.ரமேஷ் மேற்பார்வையில், திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் தலைமையில் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, அரசு நிலத்தை மீட்டனர்.

அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் இடித்து தள்ளினர். ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் ஊத்துக்கோட்டை வட்டம் குஞ்சரம் கிராமத்தில் வரவு கால்வாய் மற்றும் ஓடை பகுதியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து, ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று,  ₹30 லட்சம் மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டனர்.

Tags : Tiruvallur ,Cholavaram ,Uthukkottai ,Revenue Department ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...