தி.பூண்டி நெடும்பலம் அரசு பள்ளியில் விழா பேச்சு, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

திருத்துறைப்பூண்டி, மார்ச் 26: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தலைமையாசிரியர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது. பேச்சுப் போட்டியில் முதலிடம் மகா  என்ற மாணவியும் கட்டுரைப் போட்டியில் முதலிடம் பூர்வஜா என்ற மாணவியும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் கேடயமும் பரிசாக வழங்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி நூலகர் ஆசைத்தம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

Related Stories: