புதுக்கோட்டையில் நடைபெறும் தி கிரேட் பாம்பே சர்க்கஸ் சாகச நிகழ்ச்சி ஏப்.4ம்தேதி நிறைவு

புதுக்கோட்டை, மார்ச் 26: புதுக்கோட்டையில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த தி கிரேட் பாம்பே சர்க்கஸ் சாகச நிகழ்ச்சி ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.மும்பையை மையமாக கொண்ட தி கிரேட் பாம்பே சர்க்கஸ் 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தினர், 100க்கும் மேற்பட்ட சாகச கலைஞர்களை கொண்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தங்களது சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் புதுக்கோட்டை ஏ.எப்.டி. மைதானத்தில் தி கிரேட் பாம்பே சர்க்கஸ் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தலா 2 காட்சிகளும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3 காட்சிகளும் நடைபெற்று வருகிறது.

கவர்ச்சி கன்னிகளின் ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சிகளும், சாகச கலைஞர்களின் சாகசங்களும் பார்வையாளர்களின் கண்களை கட்டிப் போடுகிறது.பன்னாட்டு நடனங்கள், சாகசங்கள் இளம்பெண்களின் அரேபியன் ஸ்பெல்லி நடனம், ரஷியன் ரிங் நடனம், ஆப்பிரிக்கன் நாட்டு லிம்போ நடனம் போன்ற பன்னாட்டு நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஜோக்கர்களின் நகைச்சுவை நிகழ்ச்சிகள், குழந்தைகளை கவரும் ரஷிய நாய்களின் சாகசங்கள், வெளிநாட்டு பறவைகளின் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி பார்ப்பவர்களை கவரும் வகையில் உள்ளது.நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் இன்னல்கள், மன அழுத்தத்தை போக்கும் வகையில் இந்த சாகச நிகழ்ச்சி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சர்க்கஸ் நிகழ்ச்சி ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.

Related Stories: