நாகை மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

கீழ்வேளூர், மார்ச் 26:  நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுப்படுத்திட தமிழக முதல்வர் ஆணையின்படி மெகா தடுப்பூசி முகாம் நாகை மாவட்டத்தில் இன்று (26ம் தேதி) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 350 சிறப்பு முகாம்களில் நடைபெற உள்ளது. 10,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுபட்டு போன முன்களப்பணியாளர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் 12 முதல் 14 வயதுடைய மாணவ, மாணவிகள் தவறாமல் கார்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மே 2021க்கு முன் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் ஆகியோர் அனைவரும் தவறாது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: