பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஊட்டி, மார்ச் 25: மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது: தமிழக  அரசின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்காற்றியவர்களுக்காக  பசுமை சாம்பியன் விருது நிறுவப்பட்டு உள்ளது. இவ்விருது தொடர்பான விண்ணப்ப  படிவம் மற்றும் வழிமுறைகள் www.tnpcb.gov.in/pdf  2002/guidelinesappsgreenchampion23222.pdf என்ற இணைப்பில் இருந்து  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்விருதுக்கு விண்ணப்பிப்போர் பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)  அல்லது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர்  அவர்களிடமோ சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்கள்  சமர்பிக்க வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் அம்ரித்  தெரிவித்துள்ளார்.

Related Stories: