×

சின்னவீரம்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட கோரிக்கை

உடுமலை,மார்ச்25: சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், புதிய வகுப்பறைகள் தேவைப்படுகிறது. இதற்காக நமக்கு நாமே திட்டத்தின் மூலம் தரை தளத்தில் 4 வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. மேலும் வகுப்பறைகள் தேவைப்படுவதால் நமக்கு நாமே திட்டத்தின் சின்னவீரம்பட்டி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல் தளத்தில் 4 வகுப்பறைகள் கட்டுவதற்காக மூன்றில் ஒரு பங்கு தொகையான ரூ.12,16,66ஐ ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் முன்னிலையில் சின்னவீரம்பட்டி பள்ளிதலைமை ஆசிரியர் ,பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்  சோமசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் திருமலைச்சாமி, தொழிலதிபர் மெய்ஞானமூர்த்தி,சின் வீரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி, பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், துணைத்தலைவர் மணியரசு,தனபால்,சேகர்,நாகராஜன் ஆகியோர் உடுமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டனிடம் வழங்கினர்.

Tags : Chinnaveerampatti Middle School ,
× RELATED திருப்பூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு; பூக்கள் விலை குறைவு