×

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம்

நத்தம், மார்ச் 25: நத்தம்  மாரியம்மன் கோயிலில் மாசிப்பெருந்திருவிழா கடந்த மார்ச் 7ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 22ம்  தேதி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நேற்று முன்தினம் காலை அம்பாள் மஞ்சள் நீராட்டுதல்  நிகழ்ச்சி நடந்தது.  தொடர்ந்து அன்றிரவு பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில்  எழுந்தருளிய அம்மன், குளத்திலிருந்து புறப்பட்டு கோயிலை வந்தடைந்தார்.  பின்னர் முக்கிய வீதிகளில் உலா  வந்த அம்மன், நேற்று காலை கோயிலை வந்தடைந்தவுடன், திருவிழா நிறைவடைந்தது.

Tags : Natham Mariamman Temple Masi Festival Amman Nagarvalam ,Bhopal ,
× RELATED ஒன்றிய அரசு திட்டத்தின் பெயரை...