சோழவந்தான், மார்ச் 25: சோழவந்தான் எம்.வி.எம்.கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் ஆரோக்கியம் கண்டறிவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு தாளாளரும், கவுன்சிலருமான டாக்டர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் தீபாராகிணி, குழந்தைகள் நலத்திட்ட மேற்பார்வையாளர்கள் பாண்டியம்மாள், செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி பணியாளர் உமா வரவேற்றார். குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் திருமகள் முகாமை துவக்கி வைத்து, ஆலோசனைகள் வழங்கினார். இதையடுத்து 6 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளின் எடை, உயரம் அளவீடு செய்யப்பட்டது. இதன்படி அவர்களின் ஆரோக்கியத்தை கண்டறிந்து, அவர்களுக்குரிய சத்தான உணவு வழங்குதல் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுதா, திட்ட உதவியாளர் சங்கர், அங்கன்வாடி பணியாளர் பிரியா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.மேலும் இதே பள்ளியில் தாளாளர் மருதுபாண்டியன் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாமும் நடைபெற்றது. கச்சைகட்டி சுகாதார நிலைய மருத்துவர் செல்வராஜ் தலைமையில் மருத்துவக் குழுவினர் 6, 7, 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டனர்.