×

ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிப்பதன் மூலம் டவுண் சிண்ட்ரோம் பாதித்த குழந்தைகள் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும் மீனாட்சி மிஷன் டாக்டர்கள் நம்பிக்கை


மதுரை, மார்ச் 25: உலக டவுண் சிண்ட்ரோம் தினத்தையொட்டி, டவுண் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு இலவச உடல்நல பரிசோதனையை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்தியது. டவுண் சிண்ட்ரோம் பாதித்த குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்று பரிசோதனைகளுடன், ‘செண்ட மேளம்’ போன்ற இசைக்கருவிகளை இசைத்து நடனமாடி, யோகா செய்து காட்டி, படைப்பாக்கத்திறன்களை நேர்த்தியாக வெளிப்படுத்தினர். டவுண் சிண்ட்ரோம் பெடரேசன் ஆப் இந்தியா தலைவர் டாக்டர் சுரேகா ராமச்சந்திரன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மரபணுவியல் நிபுணர் டாக்டர் பிரதீப் குமார் பேசினர். டவுண் சிண்ட்ரோம் பாதிப்புள்ள சுமார் 50 குழந்தைகள் பெற்றோருடன் பங்கேற்றனர். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசும்போது, ‘‘டவுண் சிண்ட்ரோம் பாதிப்பை குணப்படுத்த இயலாது. எனினும், குழந்தை பிறந்தவுடன் அடையாளம் கண்டு, ஆரம்பத்திலேயே சிகிச்சையளிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தை ஒரு முழுமையான, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்’’ என்றார். மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர் கண்ணன், குழந்தைகளுக்கான பராமரிப்பு மைய மருத்துவ நிபுணர் டாக்டர் உமா முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Meenakshi ,Mission ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...