ஒன்றியக்குழு கூட்டம்

திருப்புத்தூர், மார்ச் 25: திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் சண்முகவடிவேல் தலைமையில் நடந்தது. ஆணையாளர் தென்னரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணைத்தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி, உறுப்பினர்கள் கருப்பையா, சரவணன், கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், ஜெயபாரதி, கலைமகள், பாக்கியலெட்சுமி பன்னீர்செல்வம், சகாதேவன், ராமேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், தண்ணீர் வசதி, சாலை வசதி, பள்ளி கட்டிட பராமரிப்பு, தெரு விளக்குகள், குடிசை வீடுகளில் உள்ளவர்களுக்கு வீடு வழங்குவதற்காக கணக்கெடுப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்லா நன்றி கூறினார்.

Related Stories: