சிவகாசி மாநகராட்சி அம்மா உணவகத்தில் மேயர் ஆய்வு

சிவகாசி, மார்ச் 25: சிவகாசி மாநகராட்சி சார்பில் அண்ணா காய்கறி மார்க்கெட் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்களுக்கு தினமும் காலை, மதியம் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன் திடீரென ேநற்று காலை அம்மா உணவகத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கு தரமாக உணவு வழங்கப்படுகிறதா என சோதனையிட்டனர். பின்னர் இருவரும் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவை வாங்கி சாப்பிட்டு அதன் தரத்தை பரிசோதித்தனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் மேயர் சங்கீதா இன்பம் கூறுகையில், ‘‘சிவகாசி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்று மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வாறுகால், சாலை வசதி போன்ற பணிகளை விரைந்து முடித்திட மாநகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம். அம்மா உணவகத்தில் உணவு தரமாக வழங்கப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. முதல்வரின் உத்தரவு படி, மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு உணவு தரமாகம், சரியான நேரத்திலும் வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: