தர்மபுரி நகராட்சி அவசர கூட்டம்

தர்மபுரி, மார்ச் 25: தர்மபுரி நகராட்சி கூட்டரங்கில், அவசர நகர்மன்ற கூட்டம் நேற்று மாலை நடந்தது. நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை வகித்தார். துணைத்தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையர் சித்ரா கலந்து கொண்டு பேசினார். இதில் நகராட்சியில் 33 வார்டுகளில் உள்ள காலி இடத்திற்கும், மனைகள் உள்ள இடத்திற்கும் வரிகள் தனித்தனியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் காலி இடத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது. காலி இடத்திற்கும், வீட்டுமனைக்கும் ஒரே இடத்தில் 2 வரி வசூலிக்கப்பட்டது. இதை கண்டறிந்து ₹13 லட்சத்து 7 ஆயிரத்து 957 காலியிடத்திற்கான வரி, தள்ளுபடி செய்யப்பட்டது.

கூட்டத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்து கவுன்சிலர்கள் கேட்ட கேள்விக்கு, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது பதில் கூறுகையில், ‘கடந்த 2018ம் ஆண்டு சோகத்தூர் ஊராட்சியில், 10 ஏக்கர் நிலம் புதிய பஸ் ஸ்டாண்டிற்காக தனியார் அமைப்பு வழங்கியது. புது பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு, ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் ₹42 கோடியில் புதிய கட்டிடம் கட்ட உள்ளது.25 ஆண்டுகள் அந்த நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துக்கொள்ளும். ஆண்டுக்கு ₹55.40 லட்சம், நகராட்சி நிர்வாகத்திற்கு அந்த நிறுவனம் மூலம் வருவாயாக தரும்,’ என்றார்.

Related Stories: