எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் புல்லட் பேரணி

ஓசூர், மார்ச் 25: உலக மகளிர் தினத்தையொட்டி, கடந்த 8ம்தேதி தலைநகர் தில்லியில் இருந்து, எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் 36 பேர், புல்லட் மூலம் விழிப்புணர்வு பேரணியை துவக்கினர். இவர்கள் பஞ்சாப், ராஜஸ்தான், குஜ்ராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா வழிவாக 6 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து நேற்று தமிழகம் வந்துள்ளனர். நேற்று எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள், தமிழக நுழைவு வாயிலான ஓசூருக்கு வந்தனர். அவர்களுக்கு ஓசூர் மக்கள் சங்கம் சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கத்தலைவர் சரவணன் மற்றும் செயலாளர் காமராஜ், ரோட்டரி கிளப் ஏஞ்சல்ஸ் மற்றும் டிராபிக் வார்டன்கள், பொதுமக்கள் வரவேற்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன்ர.

Related Stories: