×

விராலிமலை கோயில் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

விராலிமலை, மார்ச் 25: விராலிமலை கருப்பர் கோயில் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்விராலிமலை முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள கருப்பர்கோயில் அருகே ஆண் சடலம் கிடப்பதாக விராலிமலை போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து நிகழ்விடம் சென்ற போலீசார் 60 வயது மதிக்கதக்க ஆண் சடலத்தை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து விராலிமலை கிராம நிர்வாக அலுவலர் ஞானசகாய சந்தியா அளித்த புகாரினைத் தொடர்ந்து வழக்கு பதிந்த போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊர், இறப்பில் ஏதேனும் மர்மம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Viralimalai temple ,
× RELATED விராலிமலை கோயில் தேரோட்டத்தில் 8 பேரிடம் செயின் பறித்த பெண் கைது