நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கல் கங்கைகொண்ட சோழபுரம் பொன்னேரியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் 52 ஏக்கர் மீட்பு

ஜெயங்கொண்டம், மார்ச். 25: கங்ைக கொண்ட சோழபுரம் ெபான்னேரியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில்52 ஏக்கர் மீட்கப்பட்டது.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த ராஜேந்திரசோழனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சோழகங்கம் என்கிற பொன்னேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சோழகங்கம் என்கிற பொன்னேரி 700 ஏக்கர் பரப்பளவிலானது. இந்த ஏரியினால் சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1374 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த ஏரியில் 125 ஏக்கர் ஏரிப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு 53 விவசாயிகள் கடலை, எள், உளுந்து, தைல மரம் விவசாயம் செய்து வந்தனர். கடந்த 2நாட்களாக விவசாயிகள் விவசாயம் செய்து வந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 2 நாட்களில் சுமார் 50 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றி வருகின்றனர். மேலும் 2 நாட்களில் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகளில் பொதுப்பணித்துறை பொறியாளர் ராஜா சிதம்பரம் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் ஆமணக்கம் தோண்டி குருவாலப்பர் கோவில் பிச்சனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: