×

திருக்கடையூர் கோயிலில் 27ம் தேதி கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி, மார்ச் 25: மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் இரவு துவங்கியது.
திருக்கடையூரில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இது அட்ட வீரட்ட தலங்களில் முதன்மையானதாகும். இக்கோவில் மூவரால் பாடப்பட்ட தலமாகும். எமனை சம்ஹாரம் செய்து பின் அனுக்கிரஹம் செய்த தலமாகும். அதனால் இங்கு 60, 70, 80 பிறந்த தினங்களில் ஆயுள்ஹோமம் செய்து கொள்வது சிறப்புடையதாக கருதப்படுகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 27ந் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது. அதையொட்டி 8 கால யாக பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் யாகசாலை பூஜை நேற்று முன்தினம் இரவு துவங்கியது. அபிராமிஅம்மன், காலசம்ஹாரமூர்த்திக்கு, நாவாக்கினி ஹோமம் நடைபெற்றது. முருகன் விநாயகருக்கு பஞ்சாக்கினி ேஹாமம் நடைபெற்றது. பரிவார தெய்வங்களுக்கு ஏகாக்னி ேஹாமம் நடைபெற்றது. 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 120 வேத விற்பன்னர்கள் யாகசாலை பூஜையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பூஜையில் ஓதுவார்கள் 27 திருமுறை, தேவாரம், திருப்பதிகம், பாடுவார்கள். யாகசாலை பூஜையில் தருமபுரம் 27வது குருமகா சன்னிதானம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்துபேட்டியளித்த குருமகா சன்னிதானம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் மகாகும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஞாயிற்றுகிழமை 27ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Tags : Tirukkadaiyur Temple ,
× RELATED அமாவாசையை பவுர்ணமியாக்கி காட்டிய...