×

பழைய ஜெயங்கொண்டம் ஒட்டர் தெருவில் அறுந்து தொங்கிய மின் கம்பி சீரமைப்பு வேலாயுதம்பாளையம் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்

வேலாயுதம்பாளையம், மார்ச் 25: கரூர் மாவட்டம் நடையனூர் இளங்கோ நகரில் குடியிருப்பு பகுதிகள் உள்ள இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என கோரி கடந்த 21ம் தேதி திங்கட்கிழமை அன்று மனுநீதி முகாமில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் மனுவை கொடுத்தனர்.இந்நிலையில் நேற்று வரை தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தாததால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மதியம் இளங்கோ நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த புகளூர் தாசில்தார் மதிவாணன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடுமாறும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். அப்போது செல்போன் டவர் அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட தாசில்தார் செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு விரைந்து சென்று அங்கு டவர் அமைக்கும் பணியை பார்வையிட்டு தற்காலிக செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்குமாறு தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் ஒப்பந்ததாரரிடம் தெரிவித்தார்.அதனால் செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. பணிகள் நிறுத்தப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Velayuthampalayam ,
× RELATED கரூர் வேலாயுதம்பாளையம் அருகே கடும் வெயில் காரணமாக 2 இடங்களில் தீ விபத்து