×

பாலிசி சேவைக்காக 2.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு நெல்லை கோட்ட மேலாளர் தகவல்

நெல்லை, மார்ச் 24: பாலிசி சேவைக்காக நெல்லை கோட்டத்தில் 2.5 லட்சம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டதாக எல்ஐசி நெல்லை கோட்ட முதுநிலை மேலாளர் தெரிவித்துள்ளார். நெல்லை கோட்ட எல்ஐசி அலுவலகத்தின் நவீனப்படுத்தப்பட்ட கட்டிட சேவையை தென் மண்டல மேலாளர் கதிரேசன் நேற்று துவக்கி வைத்தார்.  விழாவில் நெல்லை கோட்ட முதுநிலை மேலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றுப் பேசுகையில், நெல்லை கோட்டம் துவங்கி 30வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. புதுவணிக செயல்பாட்டில் மட்டுமல்லாது வாடிக்கையாளர் சேவையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாலிசி சேவையின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் இயக்கத்தின் மூலம் நெல்லை கோட்டத்தில் சுமார் 2.5 லட்சம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டோம் என்றார்.

தென் மண்டல மேலாளர் கதிரேசன் பேசுகையில், பணிபுரியும் இடத்தில் சூழல் சிறப்பாக இருந்தால் தான் பணியாளர் திறனும் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காப்புத் தொகை அவர்களின் வருமானத்திற்கு தகுந்த அளவு இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் அளித்து வரும் தொடர் ஆதரவுக்கு மேலும் சிறப்பாக சேவை செய்ய வேண்டும் என்றார். தென் மண்டல தலைமை பொறியாளர் பழனி மற்றும் அதிகாரிகள் பேசினர். விழாவில் சிறப்பாக செயல்பட்ட பொறியாளர்கள், நடப்பு ஆண்டில் சிறப்பாக வணிகம் செய்த முகவர்கள் கவுரவிக்கப்பட்டனர். அலுவலக சேவை மேலாளர் வேதவல்லி நன்றி கூறினார்.

Tags : Nellai Divisional Manager ,
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: திருச்சி...