ஸ்பிக் தொழிற்சாலையில் பாதுகாப்பு வார விழா

ஸ்பிக்நகர், மார்ச் 24: ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர நிறுவனத்தில் 51வது  தேசிய பாதுகாப்பு வார  விழா கொண்டாடப்பட்டது. தேசிய பாதுகாப்பு வார  விழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு துறை பொருட்காட்சியை ஸ்பிக்நகர் ஸ்மக் ஐஏசி மண்டபத்தில் தூத்துக்குடி மாவட்ட தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையின் இணை இயக்குநர் நிறைமதி கொடியேற்றி துவக்கிவைத்தார். பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் ராமகிருஷ்ணன், கிரீன் ஸ்டார் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: