(தி.மலை) பிரதமர் வீடு திட்ட குறைபாடுகளை போக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, மார்ச் 24: பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை போக்கக்கோரி தலித் விடுதலை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் நடைபெறும் குறைபாடுகளை போக்க வேண்டும், 100 நாள் வேலைதிட்ட வருகை பதிவேட்டில் நடைபெறும் போலி பதிவுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 20க்கும் மேற்பட்ட தலித் விடுதலை இயக்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: