(தி.மலை) அரசு பெண் ஊழியரிடம் தாலி, செல்போன் பறிப்பு பைக் ஆசாமிகள் துணிகரம் செய்யாறு அருகே கத்தியை காட்டி மிரட்டி

செய்யாறு, மார்ச் 24: செய்யாறு அருகே மொபட்டில் சென்ற அரசு பெண் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி தாலி, செல்போனை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா வேலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கோட்டீஸ்வரி(38). இவர் செய்யாறு அருகே உள்ள வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கோட்டீஸ்வரி கடந்த 21ம் தேதி தனது ெமாபட்டில் காஞ்சிபுரம் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு சென்றார். அப்போது இரவு 9 மணியளவில் மேல்பூதேரி கூட்ரோடு அருகே சென்றபோது, பின்னால் ஒரே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், கோட்டீஸ்வரியின் மொபட்டை திடீரென வழிமறித்து நிறுத்தினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், தாலியை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோட்டீஸ்வரி கூச்சலிட்டார். ஆள் நடமாட்டம் குறைவான பகுதி என்பதால் ெபாதுமக்கள் வருவதற்குள் பைக் ஆசாமிகள் தாலி செயின் மற்றும் செல்போனுடன் தப்பி சென்றனர். இதுகுறித்து கோட்டீஸ்வரி மோரணம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் வழக்குப்பதிவு செய்து பைக் ஆசாமிகளை தேடி வருகிறார்.

Related Stories: