(தி.மலை) பைக் மோதி பெண் பலி போளூர் அருகே

போளூர், மார்ச் 24: போளூர் அருகே பைக் மோதியதில் சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தார். கலசபாக்கம் தாலுகா வீரலூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் கிரண். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு உறவினர் ஒருவரை ஊருக்கு அனுப்புவதற்காக அவரை பைக்கில் ஏற்றி கொண்டு போளூர் பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காங்கேயனூர் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் அருகே நடந்து சென்ற அதே கிராமத்தை சேர்ந்த சிவகங்கை(55), அஞ்சலா(39) ஆகிய இருவரின் மீது மோதியது.

இதில் சிவகங்கை படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அஞ்சலா படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அஞ்சலாவை போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவகங்கை மகன் முருகன் போளூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் சம்பவ இடத்திற்கு வந்து சிவகங்கையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: