×

பூந்தமல்லி அருகே திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. பூந்தமல்லி அருகே திருமழிசையில் ஜெகந்நாதபெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில் அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு, கடந்த 19ம் தேதி பகவத் ப்ரார்கத்தனையுடன் துவங்கி முதல் கால ஹோமம் நடந்தது. 20ம் தேதி 2ம் காலை கால ஹோமம், மாலையி 3ம் கால ஹோமம், 21ம் தேதி காலை 3ம் கால ஹோமம், மாலை 5ம் கால ஹேமம், 22ம் தேதி காலை 6ம் கால ஹோமம் தொடர்ந்து மகாசாந்தி ஹோமம், சயனாதிவாஸமமும் 7ம் கால ஹோமும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து நேற்று காலை 5,30 மணியளவில் 8ம் கால ஹோம் நடத்ததி 9.50 மணி முதல் 10:05 மணிக்குள் ஜெகந்நாத பெருமாள், ஶ்ரீ திருமழிசை ஆழ்வார், திருமங்கை வல்லி தாயார், ஸ்ரீஅழகிய சிங்கர், ஸ்ரீஸகண்ணன், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஅனுமன், ஸ்ரீமணவாளமுனி விமான ராஜகோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் திருவேற்காடு லயன் டி.ரமேஷ், திமுக நகர செயலாளர் தி.வே.முனுசாமி, பேரூராட்சி தலைவர் உ.வடிவேல், செயல் அலுவலர் கி.ரவி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெ.மகாதேவன் உள்பட ஆயிரக்கணக்கானேர் கலந்து கொண்டனர். நேற்று மாலையில் அழகிய சிங்கர் திருவீதி புறப்பாடு, ஸ்ரீ ஜெகந்நாத பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருவீதி உலா நடைபெற்றது. கும்பாபிஷக விழா ஏற்பாடுகளை வேலூர் மண்டல இணை ஆணையர் லட்சுமணன், கோயில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்தனர்.

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே ஆர்கே பேட்டை அடுத்த கதனநகரம் ஊராட்சியில் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைத்து, ஹோம குண்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நேற்று காலை 3ம் கால பூஜைகளை தொடர்ந்து மஹா பூர்ணாஹுதி நடத்தி புனிதநீர் கலசங்கள் கொண்டு வரப்பட்டு, கோபுர கலசத்தில் புனிதநீர் கும்பாபிஷேகம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் மற்றும் விழாக்குழுவினர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்தனர்.

இதேபோல், பள்ளிப்பட்டு அடுத்த நெடியும் ஊராட்சி வெங்கம்பேட்டை கிராம தேவதை ஸ்ரீசக்தியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கிராம தேவதை கோயிலை கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் நிதியுதவியுடன் புதிதாக கட்டி, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சி.ஜெ.சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் உமாபதி, வெங்கட்ராஜ், திமுக நிர்வாகிகள் கொளத்தூர் கோபி, முனையா, முரசொலி மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் யசோதா மோகன்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Jegannatha Perumal Temple ,Thirumalisai ,Poonamallee ,
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்...