இஸ்லாமிய மாணவிகளின் கல்வி கேள்விக்குறி: இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கலை கல்லூரி நுழைவாயில் முன்பு, இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததால்,  இஸ்லாமிய மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகி விட்டது. மேலும், மத்திய மற்றும் மாநில பாஜ அரசை கண்டித்து மாணவர் அமைப்பினர் பதாகைகளை ஏந்தி, ஹிஜாப் விவகாரத்தை வைத்து இஸ்லாமிய மாணவிகளின் கல்வியை சிதைக்க பாஜ முயற்சிக்கிறது என கோஷமிட்டனர். 

Related Stories: