×

பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்கனூர் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பெரம்பலூர்,மார்ச் 24: பெரம்பலூர் மாவட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வெங்கனூர் ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 குடிசை வீடுகள் முழுமையாக அகற்றப்பட்டது என்று கலெக்டர்  வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவத்திருப்பதாவது:பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கட்டுப்பாட்டில் 73 ஏரிகளும், 33 அணைக்கட்டுகளும் உள்ளன. உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர் ஆதாரத்தை அதிகப்படுத்தவும் ஏரிகள் மற்றும் நீர்வழித்தடங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகவும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக வேப்பந்தட்டை தாலுகா, பெரியம்மா பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கனூர் ஏரியில் 0.148 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்புகள் இருந்த 5 குடிசை வீடுகள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளும் உயர்நீதிமன்ற அரசாணையின்படி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி பொதுப்பணித்து (நீர்வள ஆதாரம்) உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், வருவாய்துறை அலவலர்கள், அரும்பாவூர் போலீசார் என அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றினர்.இதனால் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் சேமிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Tags : Venkanur Lake ,Perambalur District ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...