×

என்எல்சி 2வது சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

சேத்தியாத்தோப்பு, மார்ச் 23 : கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுத்து மின்சாரம் தயாரித்து வரும் நிலையில் ஏற்கனவே சுரங்கம் ஒன்றில் A, சுரங்கம் 2 ஆகிய பகுதிகளில் நிலக்கரி வெட்டி எடுத்து மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரிவெட்டி, கரைமேடு, கத்தாழை, மும்முடி சோழகன், மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, அதிகப்படியான இழப்பீடு வழங்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில்  நெய்வேலி என்எல்சி அதிகாரிகள் கரிவெட்டி கிராமத்தில் உள்ள இடங்களை அளவீடு செய்வதற்காக வருகிறார்கள் என தகவல் பரவியதையடுத்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு செய்ய வந்த வருவாய்த்துறை அதிகாரிகளையும் என்எல்சி நிறுவன அதிகாரிகளையும் முற்றுகையிட்டு கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் ஏக்கர் ஒன்றுக்கு 30 லட்சம் வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு
ஏற்பட்டது. சேத்தியாத்தோப்பு உட்கோட்ட டிஎஸ்பி சுந்தரம் மற்றும் ஆய்வாளர்கள் மைக்கேல் இருதய ராஜ், மீனா, பாண்டி செல்வி, எஸ்ஐக்கள் மாணிக்கராஜ், ராஜாராம், சக்கரவர்த்தி, அன்பரசன், சிவக்குமார்.தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு
ஏற்பட்டது.

Tags : NLC ,
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...