×

மானாமதுரை அருகே கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

மானாமதுரை, மார்ச் 23: மானாமதுரை தாலுகாவில், நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை கண்டறிந்து அகற்றுமாறு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டிருந்தார். இதன்படி, மானாமதுரை தாலுகாவில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை கண்டறிந்து, நில அளவை செய்து, சட்டமுறைப்படி நோட்டீஸ்கள் அனுப்பி, ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மானாமதுரை தாலுகா, எம்.கரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை கண்மாயில், பல்வேறு ஆக்கிரப்புகள் உள்ளது கண்டறியப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு பல்வேறு முறை நோட்டீஸ்கள் அனுப்பியும், அவர்கள் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்புக்களை அகற்றவில்லை. இந்நிலையில், நேற்று தாசில்தார் தமிழரசன், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் அரசு அலுவலர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியின்போது எம்.கரிசல்குளம் கண்மாய் கரையில் ஆக்கிரமித்து கட்டிப்பட்டிருந்த 2 வீடுகள், ஒரு கழிவறை, ஒரு ஆட்டுக் கொட்டம் மற்றும் 3 ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 7 ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இப்பணியில், மண்டலத்துணை வட்டாட்சியர் சேகர், வருவாய் ஆய்வாளர் லதா, கிராம நிர்வாக அலுவலர் கதிரேசன், கிராமஉதவியாளர் வாசு ஆகியோர் உடனிருந்தனர். மானாமதுரை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Tags : Kanmai ,Manamadurai ,
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாயில்...