×

ஹைமாஸ் லைட்டை இறக்கியபோது விபத்து இளைஞர் படுகாயம்

விருதுநகர், மார்ச் 23: விருதுநகர் தேசபந்து மைதானத்தில் 60 அடி உயர ஹைமாஸ் மின்விளக்கு உள்ளது. இதில் சில விளக்குகள் எரியாததை தொடர்ந்து இறக்கி பழுது நீக்கம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. மேலிருந்து கோபுர விளக்குகளை இறக்கிய போது திடீரென விழுந்தது. பழுதுநீக்கும் பணியில் இருந்த தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர் பால தினேஷ் (18) படுகாயம் அடைந்தார். விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யாமல் ஒப்பந்த நிறுவனம் செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: திருச்சி...