×

வீரபாண்டியன்பட்டினம் மீனவர்களுக்கு நாட்டுப்படகில் பொருத்தும் இயந்திரம்

திருச்செந்தூர், மார்ச் 23: திருச்செந்தூர் அடுத்த வீரபாண்டியன்பட்டினத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேருக்கு, படகில் வெளிப்புறமாக பொருத்தும் இயந்திரங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். திருச்செந்தூர் வட்டாரம், வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 17 பேர், கொம்புதுறையைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர் என மொத்தம் 35 மீனவர்களுக்கு அரசு சார்பில் மானிய விலையில் நாட்டுப்படகில் வெளிப்புறமாக பொருத்தும் இயந்திரங்களை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வழங்கினார். தொடர்ந்து பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

 இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், திமுக மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் உமரிசங்கர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றியச் செயலாளர்கள் ரமேஷ், இசக்கிபாண்டியன், சுப்பிரமணியன், நகர பொறுப்பாளர் வாள் சுடலை, மீன்வளத்துறை இணை இயக்குநர் விஜயராகவன், உதவி இயக்குநர் பைலா, திருச்செந்தூர் ஆர்டிஓ புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், வீரபாண்டியன்பட்டினம் பஞ்., தலைவர் எல்லமுத்து, துணைத்தலைவர் ஜெகதீஷ், ஊர் கமிட்டி தலைவர் பிரேட்டன் வி. ராயன், துறைமுக சபை தலைவர் ரபேல், அமலிநகர் பங்குத்தந்தை ரவீந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், சுதாகர், முத்துகிருஷ்ணன், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் டெண்டுல்கர், கேடிசி முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Veerapandiyanpattinam ,
× RELATED வீரபாண்டியன்பட்டினத்தில் பேரிடர் மீட்புக்குழுவுடன் போலீஸ் ஐஜி ஆலோசனை