×

சென்னை போராட்டத்தில் பங்கேற்க திருச்சியிலிருந்து ரயிலில் புறப்பட்ட 110 மாற்றுத்திறனாளிகள் கைது

திருச்சி, மார்ச் 23: சென்னை போராட்டத்தில் பங்கேற்க திருச்சியில் இருந்து ரயிலில் புறப்பட்ட 110 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.1,000, ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உதவித்ெதாகை ரூ.1,000த்தை ரூ.3 ஆயிரமாகவும், ரூ.1,500யை ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு 22ம் தேதி (நேற்று) போராட்டம் நடத்தப்படும் எனவும், இதில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்க வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்பட்டனர். அதன்பேரில் திருச்சி ரயில் நிலையம், பஸ் நிலையத்தில் கன்டோன்மென்ட் உதவி கமிஷனர் அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் சேரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை திருச்சியில் இருந்து சென்னைக்கு ரயிலில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்க நிர்வாகிகள் ஜெயபால், குமார் தலைமையில் செல்ல முயன்ற 110 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அருகே உள்ள திருமண மண்டபத்தில் 110 பேரையும் அடைத்து வைத்தனர். தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.


Tags : Trichy ,Chennai protest ,
× RELATED ஓடும் பஸ்சில் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்