×

ரங்கத்தில் அரசு பஸ் மோதி ஆந்திர பெண் பலி

திருச்சி, மார்ச் 23: ஆன்மிக தலங்களில் தரிசனம் செய்வதற்காக, ஆந்திர மாநிலம் விஜயநகரம் ஜாகுவா வீதியை சேர்ந்த சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர். பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் ரங்கம் வந்தனர். சாமி தரிசனம் செய்வதற்காக அம்மா மண்டபத்தில் குளித்த பின்னர் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். இதில், ஜோதியின் மனைவி தண்டம்மா(62), அம்மா மண்டப சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், தண்டம்மா மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட தண்டம்மாவை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு தண்டம்மா இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் முருகவேல் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை சரவணபுரத்தை சேர்ந்த தர்மராஜை கைது செய்து, விசாரித்து வருகிறார்.

மற்றொரு சம்பவம்: திருச்சி வரகனேரி சந்தனபுரத்தை சேர்ந்தவர் சிராஜூதீன். இவரது மனைவி தில்சாத்பேகம்(55). இவர்கள் இருவரும் சமயபுரம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் வேகத்தடையில் எறி, இறங்கியபோது திடீரென தில்சாத்பேகம் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Aurangabad, Andhra Pradesh ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி