வரி விளம்பரங்கள் கரூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை மக்கள் இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும்

கரூர், மார்ச் 23: கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் கடை வாடகை ஆகிய பாக்கி கட்டண தொகையை மாநகராட்சி அலுவலகத்திலோ அல்லது இனாம் கரூர், தாந்தோணி, காந்தி கிராமம் ஆகிய பகுதிகளில் செயல்படும் மாநகராட்சி வரி வசூல் மையங்களில் உரிய கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன்,எந்தவித முன்னறிவிப்பு இன்றி உடனே குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே பொதுமக்கள் தாங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகையை இம்மாத இறுதிக்குள் செலுத்தி கணக்கை நேர் செய்து கொள்ளுமாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: