×

குடந்தை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க முடியாமல் நோயாளிகள் அவதி

கும்பகோணம், மார்ச் 22: கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க முடியாமல் நோயாளிகள் அவதிப்படுவதால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை விடுத்துள்ளது.தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட தலைமை அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில் கும்பகோணத்தை சுற்றியுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு நோயாளியாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சிலர் உள்நோயாளிகளாகவும் உள்ளனர்.இந்நிலையில் அரசு மருத்துவமனையில் தேவைப்படுவோருக்கு ஸ்கேன் செய்து சோதனை சான்று வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஸ்கேன் எடுக்கும் தொழில்நுட்ப அலுவலர் இல்லாததால் ஸ்கேன் எடுக்காமல் இருந்து வந்தது. மேலும் கடந்த 18ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட ஸ்கேன் மருத்துவரும் ஒரு மாத விடுப்பில் சென்றதால் அவசரத்திற்கு ஸ்கேன் செய்ய முடியாமல் உள் மற்றும் வெளி நோயாளிகள் அவதியுற்று வந்தனர். இதனால் கும்பகோணத்தில் அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை பெறமுடியாமல் இருந்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர குழு சார்பில் மாநகர செயலாளர் செந்தில்குமார், நகர குழு உறுப்பினர் ராஜகோபாலன், பார்த்தசாரதி ஆகியோர் மருத்துவமனை இணை இயக்குனரை சந்தித்து உடனடியாக ஸ்கேன் இயங்குவதற்கும் விடுப்பில் சென்றுள்ள மருத்துவருக்கு பதிலாக மாற்று மருத்துவரை ஏற்பாடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.அதன் பேரில் மருத்துவமனையின் இணை இயக்குனர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தற்காலிகமாக ஸ்கேன் ரிப்போர்ட் பெற தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி உடன் வர ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.


Tags : Kuttan Government Hospital ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது