×

பாபநாசம் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைகுழு விழிப்புணர்வு கூட்டம்

பாபநாசம், மார்ச் 22: பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் தலைமையில் நடந்தது.பள்ளி மேலாண்மை குழு தலைவர் குர்ஷிதா பானு, வார்டு கவுன்சிலர்கள் முத்துமேரி, சமீரா பர்வின், வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சித் திட்டத்தை பற்றியும், மாணவர் சேர்க்கை அதிகரிப்பதும், தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்குவது பற்றி பெற்றோர்கள் அறிந்து கொள்ளுதல் குறித்து விளக்கிக் கூறினார்.கூட்டத்தில் மாதாமாதம் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்களின் ஆலோசனை கூட்டம் நடத்துவது, பெற்றோர்களின் பங்களிப்பால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும், அரசுப் பள்ளியில் கல்வி தரம் உயர்வடைந்துள்ளது, இதனை பாராட்டும் விதமாக தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ன்னார்வலர் வின்சி மெட்டில்டா நன்றி கூறினார்.வல்லம்: செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி, உதவி ஆசிரியைகள் கீதா, சுமதி ஆகியோர் பேசினர். இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி குறித்து கலந்துரையாடினர். கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக்குழுவிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

Tags : School ,Management ,Committee ,Papanasam ,Government Primary School ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி