முதல்வர் பிறந்தநாள் விளையாட்டு போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி தலைமை தாங்கினார்.

பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சங்கர் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். இதில், திமுக நிர்வாகிகள் கணபதி, சிவா, கோபி, சபாபதி, பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: